• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாக்குதல்!

Juni 5, 2024

யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று(04) மதியம் வீடு புகுந்து, நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா.  (05.06.2024, ஜெர்மனி)

வீட்டில் தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும், முதலாவது மகளின் கணவரும் இருந்தநேரம், மூன்றாவது மகளின் கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். முதலாவது மகளின் கணவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!

அதன் பின்னர் 7பேர் கொண்ட வன்முறைக் கும்பல் கையில் பொல்லுக்கட்டைகளுடன் வீடு புகுந்து, தாய் அவரது மூன்று மகள்கள் மற்றும் மூத்த மகளின் கணவன் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் தாயின் தலை மற்றும் வலது கை மீதும், முதலாவது மகளின் கணவரின் இடது காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed