• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்

Jun 3, 2024

பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

பூமி அதன் அச்சில் சுழலும்போது நாளின் நீளம் கூடும். இதன் காரணமாக எதிர்காலத்தில் நாளின் நீளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பகல் இருக்கும் சூழலில் எதிர்காலத்தில் அது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

யாழில் இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த துயரம்.

இது குறித்து ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகையில், பூமியின் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கிறது.

அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல்

தற்போதைய வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால், நாளின் நீளம் மாறலாம் எனவும் கூறப்படுகிறது. பூமியில் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ரிங் லேசர் தொழில்நுட்பம் மூலம் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பூமியில் ஒரு நாள் 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மாற்றம் நிகழ பல ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தென்பகுதியில் பேரவலம்! வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள் : அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாளின் நீளம் 18 மணி நேரம் 41 நிமிடங்களாக இருந்தது. இந்நிலையில் இது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு 25 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும்போது சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed