இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகின்றன. சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. ‚
கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!நால்வர் காயம்
உண்மையில் வருத்தமாக இருக்கிறது. தேர்தல் நடவடிக்கைகளின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த 33 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவ்தீப் ரின்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த அதிகாரி ஒருவருக்கு இந்திய அரசு 1.5 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதாக நவ்தீப் ரின்வா ஊடகங்கள் முன் விளக்கமளித்துள்ளார்.
இந்த நாட்களில் இந்தியாவை பாதித்துள்ள கடும் வெப்பமான காலநிலையால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 58 என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி
7 கட்டங்களின் கீழ் 44 நாட்கள் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் நேற்று (2) முடிவடைந்தது. ஒரு மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 15 மில்லியன் தேர்தல் அலுவலர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளை (4) காலை 8.30 மணிக்கு தொடங்கி, அதிகாரபூர்வ முடிவுகள் நாளை (4) இரவு அல்லது நாளை மறுதினம் (5) காலை வெளியாகும்.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)