• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!

Juni 2, 2024

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!

குறித்த இரு சிறுவர்களும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக நீர் நிலையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாழில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed