யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில், நபர் ஒருவர் தீ மூட்டி கொளுத்தியதில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!
சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான இரத்னவடிவேல் பவானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி!
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியுள்ளார்.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!
- ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
- தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!