• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!

Mai 31, 2024

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன.

2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

இந்நிலையில், வவுனியா (Vavuniya)  தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை பெற்றுள்ளது.

இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ. ஜிலோட்சன் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள்.

இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை குறித்த மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை! | 2023 Gce Al Exam Result Release Vavuniya School

இதேவேளை, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில்முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed