குடியுரிமையை துறந்தவர்கள் உட்பட இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குமுறை வர்த்தமானி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவுகள் நிரந்தர வதிவிட விசா ஆணைகள் 2024 என அறியப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலனறுவை பிரதேசத்தில் சிறுவனை தூக்கி செல்ல முயன்ற ராட்சத பருந்து!
அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர், அதே போல் ஒரு வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர் திருமணமாகி 6 மாதங்களுக்குப் பிறகு புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இரத்து செய்யப்பட்டால், நிரந்தர வதிவிட அந்தஸ்து தானாகவே இரத்து செய்யப்படும்.
- டென்மார்க்கில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி!வெளியான எச்சரிக்கை.
- மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இலங்கையில் பிறந்தவர்கள் அல்லது இன்னும் இலங்கையில் குடிமக்களாக உள்ள ஒருவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இதன் கீழ் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதன்மை விண்ணப்பதாரருக்கு $1,000 கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு $400 கட்டணம் வசூலிக்கப்படும்.
தொடர்புடைய விண்ணப்பப் படிவம் 2024 மே 7 ஆம் திகதி வர்த்தமானி எண் 2383/17 மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.