• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 60 வீதமான குழந்தைகள் கைதொலைபேசிக்கு அடிமை

Mai 25, 2024

 இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 வீதமானவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது.

தென் மாகாணத்தில் உள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக விசேட வைத்தியர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் காரணமாக பல குழந்தைகள் இரவு நேரங்களில் ஓய்வின்றியும், கவலையுடனும் இருப்பதுடன் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மொபைல் போன்களுக்கு அடிமையான குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களின் உடல் செயல்படாததால் நீரிழிசு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர் கூறினார்.

கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.

அவர்களும் வன்முறையாக நடந்துகொள்வதால், பெற்றோர்களால் இந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மேலும் அவசியமானால் மட்டுமே தங்கள் குழந்தைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed