• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை!

Mai 21, 2024

நாட்டில் நிலவும் பலத்த மழை ,காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  1. 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024)
  2. யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு

அதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம் 

அதேவேளை  கொழும்பில்  இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

அதோடு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை குறித்த கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம் என கடல் மற்றும் மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!

கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3 மீற்றர் வரை எழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக  கொழும்பில்  இருந்து காலி ஊடாக மாத்தறை வரை கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியம் காணப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed