இன்று மங்கலகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் நாள் புதன்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி).
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ; விளக்கு ஏற்ற உப்புநீர் எடுக்கும் நிகழ்வு.
- இணையசேவைக்கு அடிமையான இலங்கையர்கள்!
இன்று காலை 07.40 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று மாலை 06.12 வரை ஆயில்யம். பின்னர் மகம்.கேட்டை மூலம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
மேஷம்
பேச்சுதிறன் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள். இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக வேண்டும். போட்டி பந்தயங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
நாட்டு மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!
ரிஷபம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.சிறிய தொழில்களில் லாபம் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் பகை விலகும். கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்வீர்கள்.
மிதுனம்
புதிய தொழில்களில் முத்திரை பதீப்பீர்கள்.தொழிலுக்குப் போட்டி நீங்கும்.இயலாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கு உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து தொழிலுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெற முயற்சிப்பீர்கள்.
கடகம்
கணிசமான காசு செலவழியும்.பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு ஏற்படும். தாய் மாமன் வழியில் நன்மைகள் அடைவீர்கள் காதலில் மகிழ்ச்சி ஏற்படும்.ஊரும் உறவும் மதிக்கும்படி நடப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும்.
பொன்னும் பொருளும் தரும் புதன் பிரதோஷ வழிபாடு
சிம்மம்
மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் உண்டாகும். வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரித்ததால் மன வேதனைப்படுவீர்கள்.
கன்னி
கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பீர்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த பிரச்சினை விலகும். அரசாங்க உதவியை தாராளமாக பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு மருத்துவம் பார்த்து நிவாரணம் காண்பீர்கள்.
துலாம்
தொழிலை நிலை நிறுத்துவீர்கள். கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். இதயத்தில் ஏற்பட்ட வலிக்கு பரிசோதனை செய்து கொள்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றத்தால் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
விருச்சிகம்
உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள். வெட்டிக்கதை பேசுவதை நிறுத்தவும்.பணிச்சுமையால் அவதிப்பட வாய்ப்புண்டு.அக்கறையோடு வேலை பார்த்தாலும் கெட்ட பெயரைத் தான் சம்பாதிப்பீர்கள். நண்பரின் உதவியால்வெளிநாடு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.சந்திராஷ்டமம் ஆகையால் எச்சரிக்கை தேவை.
தனுசு
வியாபாரத்தில் இருந்த தடைகளை நீங்கும். இக்கட்டான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். அன்புக்குரிய காதலிக்கு சேலை வாங்கி பரிசளிப்பீர்கள். சந்திராஷ்டமம் ஆகையால் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அந்தியேட்டி அழைப்பிதழ். அமரர் செல்வராசா சர்வேஸ்வரன்(சிறுப்பிட்டி மேற்கு)
மகரம்
நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போவீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள். தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனைப்படுவீர்கள். குடும்ப விவகாரத்தால் மனக்குழப்பம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை சொல்லி அவதிப்படாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.
கும்பம்
குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பங்கு பரிவர்த்தனையை சிறப்பாக செய்வீர்கள். தொழில்துறையில் இருந்த போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். அரசுத்துறை வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள்.
மீனம்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள். எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.
- ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
- தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!
- இன்றைய இராசிபலன்கள் (02.01.2025)