• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்-கண்டி வீதியில் கோர விபத்து-இரு இளைஞர்கள் பலி.

Mai 13, 2024

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மற்றும் ஹதரலியத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

  1. வடமராட்சி பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
  2. உயர்வடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

கெக்கிராவையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் பயணித்த பஸ் ஒன்று குறித்த லொறியை கடந்து முன்னோக்கிச் செல்வதற்கு முயன்ற போது எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி பின்னர் லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்!

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களது சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed