கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(13.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்!
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (13.05.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.78 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 223.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 381.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
- ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
- தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!
- இன்றைய இராசிபலன்கள் (02.01.2025)