• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருச்செந்தூரில் அதிர்ச்சி! 100 அடி உள்வாங்கிய கடல்!

Mai 9, 2024

கடந்த சில நாட்களாக கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வரும் நிலையில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி!

கடந்த சில நாட்களாக வங்கக்கடல் பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை முதல் குமரி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் ஆபத்தான கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் குமரியில் ராட்சத அலைகள் இழுத்து சென்றதில் ஒரு சிறுமி, 5 மருத்துவ மாணவ மாணவிகள் பரிதாபமாக பலியானார்கள்.

  1. புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்
  2. பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)

தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் பலரும் கடற்கரை பகுதிகளுக்கு அதிகளவில் வருகின்றனர். அவ்வாறாக இன்று திருச்செந்தூரில் ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் அங்குள்ள கடற்கரையில் அலைகளில் நின்று பொழிது போக்கியுள்ளனர். அப்போது திடீரென கடல் உள்வாங்க தொடங்கியது. சுமார் 100 அடி வரை கடல் உள்வாங்கியதால் பரபரப்பு எழுந்தது. அங்கு மக்கள் யாரும் குளிக்க மேற்கொண்டு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed