யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
- வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!
- சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள். உரிமையாளர் கைது..!
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது.
ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் ‘ஹீட் ஸ்ரோக்’ காரணமாக உயிரிழந்துள்ளனர்.
- 2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
- 6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும், அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக்,பொலித்தீன் பாவனை மற்றும் மரங்களை வெட்டுதல் பிரதான காரணமாக அமைகிறது.
இயற்கைச் சூழலை மனிதன் குழப்புவதால் தேவையற்ற பாதிப்புகளை உலகம் எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது புவியின் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வயதான நாள்பட்ட நோயாளர்களின் இறப்பு யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே நாள்பட்ட நோய்களான இதய நோய் சிறுநீராகப் பாதிப்பு இரத்தக் குழாய் பாதிப்பு போன்றவர்கள் இந்த வெப்ப பாரிச நோயினால் இறக்கும் தன்மை காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாது தசை நோ தசை பிடிப்பு மற்றும் உடல் சார்ந்த உபாதைகள் பல இந்த வெப்பத்தினால் ஏற்படுகின்றது.
அதிகரித்த வெப்பம் காரணமாக முதியவர்களின் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது அதன் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும் நிலையில் அவர்கள் அதிகளவிலான நீரை அருந்த வேண்டும்.
அது மட்டுமல்லாது குளிர்மையான இடங்களில் அவர்களை தங்க வைத்தல் பழங்கள் மற்றும் அதிக குளிரான நீரை தவிர்த்து அடிக்கடி நீரை அருந்த செய்தால் வெப்பப் பாரிசவாதத்தை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.