• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில். கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

Mai 6, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் உயிரிழப்பு!
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.

பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2024, லண்டன்)

இதன் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30 kg 500g கேரளா கஞ்சாவினை போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேனி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னேடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed