யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று (01) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லாண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் !
ஹயஸ் வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் லாண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.