• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரிழந்த 19 வயது மாணவன்

Apr 30, 2024

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீரென உயிரிழந்துள்ளார்.கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

குறித்த மாணவனுக்கு கடந்த 27ஆம் திகதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அடுத்த நாளான 28ஆம் திகதியும் இணுவில் வைத்தியசாலைக்கு சிகிச்சை சென்றுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2024, சுவிஸ்)

இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்றவருக்கு திடீரென உடல் மேலும் சுகயீனம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed