• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு

Apr 30, 2024

மே முதலாம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

மதுபான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை (30) வழக்கமாக மூடப்படும் நேரம் முதல் வியாழக்கிழமை (02) திறக்கும் நேரம் வரை மூடப்படும் என கலால்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்ட அமுலாக்கல் ஆணையர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் மரணம்!

எவ்வாறாயினும்,  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கீழ் கலால் உரிமம் (FL 07, 08) பெற்று பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் இந்த உத்தரவில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed