உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் (Dubai) அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது (Sheikh Mohammed) தெரிவித்துள்ளார்.
யாழில் காணாமல் போன சிறுவன் பரந்தனில் வைத்து கண்டு பிடிப்பு!
டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகான புதிய திட்டத்துக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, விமான நிலையத்தில் புதிய முனையமொன்று அமைக்கப்படுமெனவும் ஷேக் முகமது தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
உலகின் மிக பெரிய விமான நிலையம்
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போது டுபாயில் உள்ள விமான நிலையத்ததை விட புதிதாக உலகின் மிக பெரிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. சுமார் 260 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும்.
அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம்
டுபாய் விமான போக்குவரத்து துறை, முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.
மேலும், விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படும். இந்த புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.