• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு

Apr. 22, 2024

வவுனியா வைத்தியசாலை  விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

குறித்த சம்பவம் இன்று(22) காலை இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விடுதியில் உள்ள குளியலறைக்கு அவர் சென்ற நிலையில் தவறி வீழ்ந்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியயவருகின்றது.

தென்னிலங்கையில் கோர விபத்து. சிறுமி உட்பட 7 பேர் உயிரிழப்பு!

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு. –

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed