• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

Apr 18, 2024

நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்துள்ளார்.

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, ஆம்புலன்ஸ் படகுதற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

பாகிஸ்தானை புரட்டிபோட்ட கனமழை: 80 பேர் பலி !

அதன் போது,  கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை , பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர், படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed