• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதி – மனைவி சடலமாக மீட்பு 

Apr. 15, 2024

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் (Victoria Reservoir) மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி !

இந்த விபத்திற்கு திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed