• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பண்டாரவளை பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி !

Apr. 14, 2024

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

பண்டாரவளை பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் ஒன்றே இன்று (14) காலை இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் 51மற்றும் 70 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 மற்றும் 53 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிறந்த தமிழ் புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்!

இந்நிலையில் படுகாயமடைந்த இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் விசேட வழிபாடு!

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed