• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

Apr. 12, 2024

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெரு விழா 2024

இந்து சமுத்திரத்தில் முத்தென விளங்கும் இலங்கை மாநகரில் சிரமென விளங்கும் யாழ்ப்பாண நகரிலே கோப்பாய் தொகுதியிலே நீர்வளம் நிலவளம் மிக்க விவசாயம் செழிப்பு மிக்க மக்கள் வாழும் சிறுப்பிட்டி கிராமத்தில் மேற்கு திசையில் அடியவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஞானவைரவ பெருமானுக்கும்.விநாயகர்,சிவபெருமான், வள்ளி தேவசேன முருகப்பெருமான்,சமோத முருகப்பெருமான்,நவக்கிரகம், ஸதம்ப விநாயகர்,பலிபீடம்,சண்டேஸ்வரர் முதலான மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாள் (22.04.2024) திங்கட்கிழமை அத்த நட்ச்சத்திரமும் சதுர்த்தி திதியும் சித்த யோகமும் கூடிய பகல் 9 மணி 30 நிமிடம் முதல் 10 மணி 30 நிமிடம் வரையுள்ள மிதுன லக்கின சபவேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

அச்சமயத்திலும் அதற்க்கு முன் இடம்பெறும் கிரியைகளிலும் அடியவர்கள் கலந்து கொண்டு தொண்டாற்றி வழிபாடு செய்து திருவருட் பேறுடன் நல் வாழ்வு வாழ வேண்டுகின்றோம்.

இங்கனம்
ஆலய பரிபாலன சபை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed