• Mo.. Apr. 7th, 2025 1:28:37 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது.

Apr. 12, 2024

வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வந்தமை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.

111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், நிறைய சிகரெட்டுகள் மற்றும் பல கணினி சாதனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு மற்றும் மஸ்கெலியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed