இன்று (21) பிரதோச திம்னமாகும். புதன் பிரதோஷ தரிசனம், நமக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோச விரதம் மிக சிறப்பானது.
ஒவ்வொரு மாதமும் , வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி பிரதோச நாளாகும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின்மூன்றாவது திதி திரயோதசி ஆகும். சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை.
நீர்வேலி பகுதியில் விபத்தில் பல்கலை மாணவன் பலி!
பிரதோஷ பூஜை
கட்டுநாயக்க விமான நிலையத்தில்இருவர் கைது!
திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாகக் கொண்டாடுகிறோம். திரயோதசி திதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தில் அன்றைய நாளே பிரதோஷ பூஜை செய்யப்படும்.
அதாவது திரயோதசி திதி நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம். இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு விமரிசையாக செய்யப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில்இருவர் கைது!
ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சிவபுராணம். அதன்படி புதன் கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம், நமக்கு பொன்னும் பொருளும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரதோஷ விரதம் இருந்தும் சிவ புராணம் படித்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவபெருமானை வழிபடலாம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், சிவபுராணம் படித்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சொல்லிக் கொண்டே இருப்பதும் மகா புண்ணியம் தரும்.
புதன் கிழமை பிரதோஷ தரிசனம்,
புதன் கிழமை பிரதோஷ நன்னாளில், சிவ தரிசனம் செய்து, நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்தி, சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால் இறைவன் நமக்கு அருள்புரிவார்.
பிரதோஷத்தின் போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த நைவேத்தியப் பொருட்களை வழங்கி சிவ தரிசனம் செய்வது இன்னும் பல நன்மைகளை வழங்கும்.
மேலும், பிரதோஷ நன்னாளில் எவருக்கேனும் தயிர்சாதப் பொட்டலத்தை வழங்குங்கள். பசுவுக்கு பழங்கள் ஏதேனும் வழங்குங்கள். அப்படி வழங்கும் தருணத்தில் ‘நமசிவாய நமசிவாய நமசிவாய’ என்று மூன்று முறை சொல்லி வழங்குங்கள்.
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும்.
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்