• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி

Feb. 18, 2024

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 20 அதிகமான ஆலயங்கள் உள்ளன, அவற்றில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளனர்.

இதன்படி, ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தமது பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொள்வர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed