• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் கோரவிபத்து-குடும்பஸ்தர் பலி..!

Feb 18, 2024

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த உந்துருளி மேதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்தவராவார்.உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed