• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்..

Feb 18, 2024

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும்.

முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான்.

சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை.

இதில் „சரவணபவ‘ என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

„சரவணன்‘ என்றால் „பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்‘ என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை „சரவணப்பொய்கை‘ என்பர்.

„ஓம் சரவணா பவ ஓம்“

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed