• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்?

Feb 9, 2024

இன்றையதினம் தை அமாவாசை நாளாகும். இந்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிடில் குறிப்பிட்ட 3 பேருக்கு தானம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

தை அமாவாசை

தை அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கு உரிய நாளாகும். இது மிகவும் விசேஷமானது என்று சொல்லலாம்.

ஏனெனில் தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வருகிறது, அதுவும் பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தான் மிகவும் சிறப்பு.

இதனால் இந்த ஆண்டு தை அமாவாசையானது ஒரு அரிதான அமாவாசை என்றே சொல்லலாம். மேலும், தை அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தானம், தர்மங்கள் செய்யலாம். முக்கியமாக, இந்நாளில், விரதம் இருந்து புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மட்டுமாவது செய்யுங்கள்! | Darpanam Do This Thai Amavasaya Thanam

திதி கொடுக்க உகந்த நேரம் : 

இன்று காலை 7.53 முதல்  நாளை  பிப்ரவரி 10ஆம் திகதி காலை 4.34 வரை அமாவாசை திதி கொடுக்கலாம். பொதுவாகவே, ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மட்டுமாவது செய்யுங்கள்! | Darpanam Do This Thai Amavasaya Thanam

அதிலும் முக்கியமாக தை மற்றும் ஆடி அமாவாசை அன்று மிகவும் சிறப்பான நாட்களில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை முறையாக செய்ய வேண்டும்எனவும் சொல்லப்படுகிறது.

பித்ருதோஷம் ஏற்படும் 

ஒருவேளை அப்படி செய்ய தவறினால் நமக்கு பித்ருதோஷம் ஏற்படும் மற்றும் பித்ரு சாபமும் கிடைக்கும்எனவும் கூறப்படுகிறது. பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் இருக்கும் ஒரு குடும்பத்தில் சுப காரியங்கள் ஏதும் நடக்காது.

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மட்டுமாவது செய்யுங்கள்! | Darpanam Do This Thai Amavasaya Thanam

உதாரணமாக, திருமணம் தள்ளிப்போவது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, தீராத நோய், கடன் பிரச்சினைகள், குடும்பத்தில் சந்தோஷம் இல்லாமல் இருப்பது என இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும்.

தானம் செய்யுங்கள்

எனவே, நீங்கள் அமாவாசை நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட மறந்தால் இந்த ஆண்டு தை அமாவாசை அன்று கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, படையல் இட்டு, அவர்களை நினைத்து தானம் செய்யுங்கள்.

இப்படி செய்தால் பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் நீங்கும். குறிப்பாக உங்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மட்டுமாவது செய்யுங்கள்! | Darpanam Do This Thai Amavasaya Thanam

ஒருவேளை உங்களால் இந்த ஆண்டு தை அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் குறிப்பிட்ட 3 பேருக்கு மட்டும் தானம் வழங்கலாம்.

அப்படி செய்தால், உங்கள் முன்னோர்கள் நீங்கள் செய்யும் வழிபாட்டினை ஏற்று, உங்களுக்கு ஆசி வழங்குவார்கள்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed