• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Feb. 3, 2024

ஆப்பிள் தொலைப்பேசி பயனாளர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபோன் மற்றும் மெக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் மற்றும் வங்கி கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐபோன் மற்றும் மெக் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

“ஆப்பிள் நிறுவனம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உங்களின் தொலைப்பேசியை எப்போதும் அப்டேட் செய்து வைத்திருங்கள்.

ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை | Iphone Users Bank Account Warning Government Dolle

அப்டேட் செய்வதால் ஹேக்கர்கள் உங்கள் தரவை திருடுவதை கடினமான வேலியாக அமைகின்றன.

உங்கள் லொகேசன் எப்போதும் ஓப் செய்து வைத்திருங்கள். பல செயலிகளை இருப்பிடத்தை கண்காணிப்பதால் ஹேக்கர்களுக்கு உங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவும்.

யாழில் நகைத் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

செயலிகளுக்கு „Allow location tracking“ அனுமதியை வழங்க வேண்டாம். தேவைப்படும்போது மட்டுமே இந்த அனுமதியை வழங்கவும். செயலிகளை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்.

ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை | Iphone Users Bank Account Warning Government Dolle

வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். அதுவும் குறைந்தது 12 எழுத்துக்கள் நீளம் கொண்டதாகவும், Capital Letters, Small Letters, எண்கள் கலவையாகவும் இருக்க வேண்டும்.

இரண்டு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும். 2FA, உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது.” என இந்திய அரசு எச்சரித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed