• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் அதிகரித்த பழங்களின் விலை!

Jan. 31, 2024

நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 2500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed