• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை! ஆட்டோ சாரதி கைது

Jan. 30, 2024

வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை செய்த சந்தேக நபரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுவரெலியாவில் வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஆட்டோ சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சுற்றிவளைப்பில் கைது
கைதான சந்தேக நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் திங்கட்கிழமை ( 29) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுவரெலியா வஜிரபுர கிராமத்தை சேர்ந்தவர் (வயது 29) என தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதியான இவர் (28) நுவரெலியா பொலிஸ் குழுவால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் போதை பொருள் மற்றும் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரிடம் தகவல்களை பெற , மேலதிக விசாரணைகளை நடத்த நீதவானின் உத்தரவை பெற்றுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed