• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் எதிர்காலத்தில் உயர்வடையும் நோயாளர்கள் எண்ணிக்கை!

Jan 26, 2024

கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறதி நோயாளர் எண்ணிக்கை
நாட்டில் சிரேஸ்ட பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இந்தப் பின்னணியில், இன்னும் 26 ஆண்டுகளில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் மறதி நோயாளர் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சமாக பதிவாதிகியிருந்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed