• Mi.. Apr. 16th, 2025 4:52:03 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Jan. 18, 2024

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed