• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.

Jan. 17, 2024

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய மக்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள பாடசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அத்தோடு, அதன் போது பனிப்புயல் போன்ற நிலைமைகளினால் மின் தடை மற்றும் வேறு பல சேவைகளை முடக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தொடருந்து மற்றும் விமான சேவைகளும் தாமதமாகலாம் இல்லாவிட்டால் ரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: முடப்படவுள்ள பாடசாலைகள் | England Amber Alert Warning To Peoples Weather

இந்த நிலையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed