• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மதுவை விட கல்லீரலை மோசமாக பாதிக்கும் உணவுகள்!

Jan. 17, 2024

பொதுவாக நாம் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய உடல் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று.

நாம் சாப்பிடும் உணவுகள் என்ன தான் வயிற்றில் சென்று அடைந்தாலும் அதன் வெளியேற்றம் கல்லீரல் வழியாகவும் நடக்கின்றன.

அத்துடன் நாம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் பட்சத்தில் போதியளவு ஊட்டசத்து இன்மை ஏற்பட்டு உடலிலுள்ள உறுப்புக்கள் சேதமடைய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றத்தால் அநேகமானவர்கள் கல்லீரல் பாதிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.

கல்லீரில் ஏதாவது கோளாறு ஏற்படும் போது பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சோம்பல், சோர்வு மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளை காட்டும்.

அந்த வகையில் கல்லீரின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்லீரலை தாக்கும் உணவுகள்

  1. வெண்ணெய் அதிகமான கொழுப்பு இருக்கின்றன. இது கல்லீரலின் வேலையை அதிகப்படுத்தி விரைவில் களைப்படையச் செய்யும். இதனால் கல்லீரல் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றன. வெண்ணெயிற்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை எடுப்பது சிறந்தது.
  2. சிலர் இனிப்புக்கள் என்றால் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழக்கம் தொடரும் பட்சத்தில் அவர்களின் கல்லீரல் பாதிக்கப்படும். ஏனெனின் இனிப்புக்கள் கல்லீரலின் வேலையை அதிகப்படுத்தும். இதனால் கல்லீரிலின் செயற்பாடு குறுகிய நாட்களில் சோர்வடைய ஆரம்பிக்கும்.
  3. நாம் விரும்பி சாப்பிடும் பிரஞ்சு பொரியல் கல்லீரில் கொழுப்பு படிதலை ஏற்படுத்தி வீக்கமடைய வைக்கும். இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்தால் வேறு விதமான நோய்கள் வருவதற்கான ஆபாயம் இருக்கின்றது.
  4. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பெப்பரோனி என்ற பதார்த்தம் அதிகமாக இருக்கின்றது. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்துடன் தினமும் எடுத்து கொள்ளும் நபராக இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
  5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது சீஸ் பர்கர் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இது ஒரு நிறைவுற்ற கொழுப்பாகும். இது போன்ற பழக்கங்களை நாம் தொடரும் பொழுது கல்லீரல் மட்டுமல்ல இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கு மாற்றீடாக காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது சிறந்தது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed