• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாப உயிரிழப்பு 

Jan. 14, 2024

தெவிநுவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் நேற்று  (13.1.2024) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 42 வயதுடைய சுவேதிகா என்ற தாயும், 12 வயதுடைய தனுஷ்க என்ற மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தனியார் வகுப்புக்குச் சென்ற மகனை மோட்டார் சைக்கிளில் தாய் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed