• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உழவு இயந்திரத்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

Jan. 13, 2024

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed