• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் தீ பற்றிய கடைகள் ! பல இலட்சம் சொத்துக்கள் சேதம் ;

Jan 10, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று(10) அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த  பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளையும் முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed