• Mo.. Apr. 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

Okt. 17, 2023

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன்(வயது- 63) என்பவராவார். வீட்டில் இரவு படுக்கையில் இருந்தவரை காலையில் காணாத நிலையில் தேடிய போது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டதுடன் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed