நவராத்திரி என்பது அம்பிகையை வழிபட்டு அவளின் அருளை பெறுவது என கூறப்படுகிறது.
ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார நினைத்து வழிபட்டால் அவள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் அளித்திடுவாள்.
அம்பிகை வழிபட்டால் உடல் நோய்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் ஆகியவை நீங்கும்.
நவராத்திரியின் முதல் 3 நாட்களில் துர்க்கையாகவும் அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நினைத்து வழிபடுவது வழக்கம்.
அன்னை பல்வேறு ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் அற்புதமான காலம் இதுவாகும்.
இந்த ஆண்டு சூரிய கிரகணம் அக்டோபர் 14 ம் திகதி இரவிலேயே நிகழ்கிறது. அதனால் அக்டோபர் 14 ம் திகதி மகாளய அமாவாசை அன்று கொலு அடுக்கி வைத்தால் மறுநாள் அக்டோபர் 15 ம் திகதி காலை வீடு முழுவதையும், பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகே நவராத்திரி பூஜையை துவங்க வேண்டும்.
இது அனைவருக்கும் சிரமம் என்பதால் அக்டோபர் 15 ம் திகதி காலையில் கொலு அமைப்பதே சிறப்பானதாகும். முதல் நாளே கொலுவிற்கான பொம்மைகள், கொலு படிகளை துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால், அக்டோபர் 15 ம் திகதி காலை வீட்டை சுத்தம் செய்து கொலு படிகள் அடுக்குவதற்கு எளிதாக இருக்கும்.
நவராத்திரி பூஜை துவங்குவதற்கான நேரம்
அக்டோபர் 15 ம் திகதி காலை 06.05 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் கொலு படிகள் அடுக்கி ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து நவராத்திரி பூஜையை துவக்கி விட வேண்டும்.
மாலை 6 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும்.
காலை பூஜையை 9 அல்லது 10 மணிக்கு நிறைவு செய்து விட வேண்டும். மாலை பூஜையை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
முதல் நாள் வழிபாடு
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையாக வழிபட வேண்டும்.
துர்க்கை என்றாலே துக்கங்களை நீக்கி, நமக்கு அரணாக இருந்து காக்க கூடியவள் என்று அர்த்தம்.
அனைத்திலும் வெற்றியை தரக் கூடியவள் என்பதாலும், அம்பிகை தவம் செய்ய துவங்கிய காலம் என்பதால் இந்த நாளில் நாமும் அவளை மனதார நினைத்து வழிபடலாம்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும்.
நவ துர்க்கைகளில் முதல் தேவியான சைலபுத்திரியாகவும் வழிபட வேண்டும்.
அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் அமைத்து, மலர்களில் மல்லிகையும், இலைகளில் வில்வமும் கொண்டு அம்பிகையை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக வெண் பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும். பாட வேண்டிய ராகம் தோடி.
நவராத்திரி 2023
அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்காக தவம் செய்த காலம் நவராத்திரி ஆகும்.
மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் நவராத்திரி வழிபாட்டினை துவங்க வேண்டும்.
இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15 ம் திகதி துவங்கி 23 ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக மகாளய அமாவாசை நாளிலிலேயே நவராத்திரி கொலு அமைப்பதற்கான வேலைகளை துவங்கி விடுவார்கள்.
கொலு படிகள் அடிக்கு நல்ல நேரத்தில் இரண்டு பொம்மைகளையாவது எடுத்து வைத்து விடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் சேர்ந்தே வருகிறது.
நவராத்திரி கொலு அமைக்கும் நேரம்
இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி கிரகணம் என்பது சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலம் இல்லை என கருதப்படுகிறது.
கிரகணத்தின் போது கோவில்கள் அடைக்கப்பட்டு விடும். கிரகண நேரம் நிறைவடைந்த பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்து, தெய்வத்திற்கு அபிஷேகம், சாந்தி மற்றும் பரிகார பூஜைகள் செய்த பிறகே மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். நாமும் பச்சை நிற உடை உடுத்து பூஜை செய்ய வேண்டும்.