• Do.. Mai 1st, 2025 8:28:52 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு

Sep. 21, 2023

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் துன்னாலை வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையிலேயே வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன் (வயது31), செல்வராசா (வயது50) ஆகிய இருவர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் தலை மற்றும் கால் பகுதிகளில் ஆழமான வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed