• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதுமணத் தம்பதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு!!

Sep 11, 2023

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமணத் தம்பதி கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (10.09.2023) இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் திருமணம் முடித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரமொன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 31 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 28 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.இருவரும் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed