• Mi.. Mai 21st, 2025 12:38:57 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது !

Aug. 21, 2023

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடைகளுக்குள் 4 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால்  இன்று (21.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் புத்தளம் – கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார்.

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வதற்காக இந்த கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்கு குறித்த பெண் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 04 கடவுச்சீட்டுகளுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed