ஆவரங்கால் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி விட்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி செல்வநகர் பகுதியை சேர்ந்த முருகையா விஜிராஜ் என்ற நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அங்கு வரும் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நம்பிக்கையூட்டி பல கோடி ரூபாய் பணங்களை பெற்று விட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை நிதி மோசடி பிரிவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவான சந்தேக நபரை தேடி தற்போது பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர் கிளிநொச்சி பகுதியில் இருந்து ஆவரங்கால் பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பணி புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உணவகத்துக்கு வரும் இளைஞர்களிடம் வெளிநாட்டு ஆசை வார்த்தைகளை கூறி உறுப்பினர் திட்டங்களை வழி வகுத்துள்ளார்.
இவ்வாறு இருக்கும் பொழுது புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரிடம் வெளிநாட்டுக்கு அனுப்பும் செயற்பாடு முன்னெடுத்துச் செல்வதாகவும் அதற்கு ஒரு சில இலட்சங்களுடன் அனுப்புவதாக கூறி பல தவணைகளில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தினைப் பெற்றவர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இறுதியில் போலியாக தயாரிக்கப்பட்ட விமான டிக்கெட் வழங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தலைமறைவான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.