• Di.. März 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் எச்சரிக்கை

Aug. 16, 2023

கனடாவில் கோவிட் தொற்று மெதுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் இந்த நிலையில் மாற்றம் பதிவாகியுள்ளது.

இந்த ஏற்ற இறக்க நிலைமையானது எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர் அதிகரிப்பு ஏற்படக்கூடியதன் அறிகுறியாக இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக றொரன்டோ மவுன் சினாய் வைத்தியசாலையின் மருத்துவர் எலிசன் மெக்கீர் தெரிவித்துள்ளார்.

கனடாவிலும், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழிவு நீர் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தொற்றாளர் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed