வவுனியா சிறைச்சாலையில் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான அறிவுறுத்தல்களுடன் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் நான்கு கைதிகளுக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஜூலை 25 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இதேநேரம் கைதிகளை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.