நொச்சியாகமவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நொச்சியாகம, கலா ஓயாவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அம் மாணவன் நேற்று மாலை நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கலாஓயில் நீராடச் சென்ற வேளையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.