• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் இளைஞர்கள் 4 பேர் கட்டுநாயக்காவில் கைது

Aug. 1, 2023

ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 5 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகளை பயன்படுத்தி (31.07.2023) ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவருடன் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவர்களிடம் காணப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed